முக்கிய செய்திகள் இளநீரும் அதனால் வரும் ஆபத்துகளும்

இளநீரும் அதனால் வரும் ஆபத்துகளும்

இயற்கை மனிதர்களுக்கு அளித்த கொடையில் முக்கியமான ஒன்று இளநீர். எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்ட இளநீரை விரும்பாதவர்கள் மிகச் சிலரே. இளநீரில் பல நன்மைகள் உள்ளன ஆனால் நன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? அதுபோலத்தான் இளநீரிலும் அளவற்ற பயன்கள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் உள்ளது. உண்மைதான். இளநீர் அதிகம் குடிப்பதால் உடலில் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். அதிகமாக இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் 1.விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி முடிந்தவுடன் இளநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது அவர்கள் உடலுக்கு போதுமான ஆற்றலை தருகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் சாதாரண தண்ணீர் கொண்டிருக்கும் நீரேற்ற பண்புகள் இளநீரில் இல்லை. இதில் உள்ள கார்போஹைடிரேட்க்காக வேண்டுமென்றால் இதனை குடிக்கலாம். இன்னும் சிலர் நீரின் அளவை அதிகரிக்க உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் இளநீரை குடிக்கிறார்கள், இது மிகவும் தவறானது. 2.ஆய்வுகளின் படி இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. இது நல்லதாக தோன்றினாலும் இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதனை குடிக்கும் பொழுது இது அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 3.சிஸ்டிக் பைப்ராஸிஸ் என்பது இரத்தத்தில் உப்பின் அளவை குறைவாக இருப்பதாகும். சிலர் இதனை சரி செய்ய மருந்துகளை எடுத்து கொள்ளவேண்டும் குறிப்பாக சோடியம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இளநீரில் சோடியத்தை விட பொட்டாசியமே அதிகம் உள்ளது. எனவே இளநீர் எந்த வகையிலும் உங்கள் உடலில் உப்பின் அளவை அதிகரிக்க உதவாது. 4.கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் பெண்களும் இளநீர் அதிகமாக குடிப்பது பாதுகாப்பானதல்ல. அதிகளவு இளநீர் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முடிந்தளவு இளநீரிடம் இருந்து விலகி இருங்கள். 5.இளநீரில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. பொதுவாக உடலில் அதிகளவு பொட்டாசியம் இருந்தால் அது சிறுநீரின் மூலம் வெளியேற்றபடும். ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக கோளாறுகள் இருந்தால் இந்த வேலை சரியாக நடக்காது. இதனால் உடலில் பொட்டசியத்தின் அளவு அதிகரித்து சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும். 6.இளநீர் உங்களுடைய இரத்த அழுத்தத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே அறுவைசிகிச்சையின் போதோ அல்லது அறுவைசிகிச்சைக்கு பிறகோ இளநீர் குடிப்பதை நிறுத்தி வைக்கவும். அறுவைசிகிச்சை முடிவான நாளிற்கு குறைந்தது இரண்டு வாரத்திற்காவது இளநீர் குடிப்பதை தவிர்க்கவும். 7.சிலருக்கு குறிப்பிட்ட உணவுகளால் அலர்ஜிகள் ஏற்பட வாய்ப்புண்டு. இளநீரிலும் அதுபோன்ற சில பொருட்கள் உள்ளது. எனவே அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும். 8.பழச்சாறுகளுக்கு பதிலாக இளநீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதற்கு காரணமாக கூறப்படுவது இளநீரில் குறைந்தளவு சர்க்கரை இருப்பதாகும். ஆனால் ஒரு டம்ளர் இளநீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் குடிப்பது ஆபத்தானதாகும். 9.அதிகளவு இளநீர் குடிப்பது ஹைட்ரொக்லேமியா ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். ஹைட்ரொக்லேமியா சோர்வு, தலைவலி மற்றும் மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு இளநீர் குடித்தால் சிறிது நேரத்திற்கு நடப்பதே சிரமமாக இருக்கும். இதற்கு காரணம் இதிலுள்ள எலெக்ட்ரோலைட்டுகள்தான். 10.இளநீரை வெட்டியவுடன் குடித்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ குடிக்கும் போது அதில் எந்த சத்துக்களும் இருக்காது. அதிலுள்ள அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்க வேண்டுமெனில் உடனடியாக குடிப்பது அவசியம்....